நந்தி மீது படம் எடுத்த நாகப்பாம்பு
ஆம்பூர் அருகே நந்தி மீது நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியது.;
ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை பகுதியில் சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று மாலை இங்குள்ள சிவபெருமான் வாகனமான நந்தி மீது நாகப்பாம்பு திடீரென படம் எடுத்தது. இதனைக் கண்ட பக்தர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்து நாகப்பாம்பை வழிபட்டனர். மேலும் கோவில் பூசாரி நாகப்பாம்பிற்கு தீபாரத்தனை காட்டினார். இது குறித்து தகவலறிந்து வந்த ஊர் மக்கள் நாகப்பாம்பை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.