நாட்டறம்பள்ளியில் கழிவறைக்குள் இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளியில் கழிவறைக்குள் இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது

Update: 2023-08-26 19:04 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியில் கழிவறைக்குள் இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தாய்யப்ப தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரின் மனைவி பூங்கொடி. இவருடைய வீட்டின் கழிவறையில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. உடனே பூங்கொடி நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கழிவறைக்குள் இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்புக்காட்டில் நல்ல பாம்பை விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்