கருணைக்கிழங்கில் நாகப்பாம்பு உருவம்

கருணைக்கிழங்கில் நாகப்பாம்பு உருவம் இருந்தது. இதனை பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.

Update: 2023-06-02 19:24 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 49), விவசாயி. இவர் தனது வயலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்திருந்தார். பின்னர் அறுவடை செய்து கருணைக்கிழங்குகளை மூட்டையாக கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்தார். அதில் ஒரு கருணைக்கிழங்கில் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்று முளைத்து இருந்தது. இதனைக் கண்ட ராதாகிருஷ்ணன் ஆச்சரியம் அடைந்தார். இதுகுறித்த தகவல் கிராம மக்களிடையே பரவியது. பின்னர் அந்த கருணைக்கிழங்கை கொண்டு வந்து அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ராதாகிருஷ்ணன் வைத்தார். அதற்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி வழிபட்டனர். மேலும் கருணைக்கிழங்கில் நாகப்பாம்பு போன்ற உருவம் இருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்