திருவள்ளூர் அருகே சங்கமித்ரா விரைவு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.!
திருவள்ளூர் அருகே சங்கமித்ரா விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சங்கமித்ரா விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டது. பீகாரில் இருந்து பெங்களூர் செல்லும் இந்த ரெயிலின் B5 பெட்டி தடம் புரண்டது.
இதனை தொடர்ந்து, ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்திற்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக ரெயிலானது அரைமணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது. அத்துடன், அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் அரைமணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.