வானூர் அருகே கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை சாவு

வானூர் அருகே கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை உயிாிழந்தது.

Update: 2022-07-08 17:13 GMT

வானூர், ஜூலை.9-

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 29). இவரது மனைவி கோமளா. இவர்களுடைய ஒரு வயது ஆண் குழந்தை தவான். கடந்த 26-ந்தேதி கோமளா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க ரசத்தை அறையில் உள்ள கட்டிலின் கீழ் கோமளா வைத்திருந்தார். கட்டிலின் மீது இருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக ரசம் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்தது. இதில் குழந்தையின் உடல் முழுவதும் வெந்து படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமளா, உடனடியாக குழந்தையை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி குழந்தை நேற்று காலை பரிதாபமாக இறந்து போனது. இது குறித்து வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்