பூச்சிமருந்து இருந்த காலிபாட்டிலில் தண்ணீர் குடித்த குழந்தை சாவு

பூச்சிமருந்து இருந்த காலிபாட்டிலில் தண்ணீர் குடித்த குழந்தை இறந்தது.;

Update: 2022-09-24 20:34 GMT

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரசகுலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 33). இவர் தனது தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்து விட்டு பூச்சி மருந்து இருந்த காலி பாட்டிலை தோட்டத்தின் அருகே போட்டிருந்தார். இந்தநிலையில் ராமுவின் குழந்தையான காஞ்சனா (3) அந்த காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண் குழந்தை மயக்கம் அடைந்தாள். உடனே அவளை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்