காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடித்த குழந்தை பலி

கல்வராயன்மலையில் காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடித்த குழந்தை பலி

Update: 2022-09-13 18:10 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை சேராப்பட்டு அருகே உள்ள தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 6), கிரிஷ்(1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முருகேசன் நேற்று முன்தினம் மனோகுளோரர் பைட் என்ற பூச்சிக்கொல்லி மருத்தை அவருடைய சொந்த நிலத்தில் உள்ள பயிருக்கு தெளித்து விட்டு காலி பாட்டிலை வீட்டின் அருகே கீழே போட்டுள்ளார். இதை அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவரது மகன் கிரிஷ் எடுத்து அதில் தண்ணீரை பிடித்து குடித்துள்ளான். இதனால் சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவனை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஷ் பரிதாபமாக இறந்தான். இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடித்த 1 வயது குழந்தை பலியான சம்பவத்தால் தும்பராம்பட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்