மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி-கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-28 22:40 GMT

செஸ் போட்டி

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடங்கியது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போட்டியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

பரிசு

அப்போது அவர் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள் சார்பில் கோலங்கள் வரைதல், சைக்கிள் ஊர்வலங்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டு உள்ளன என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடத்தப்பட்டு உள்ளன. இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்றார். இதில் உதவி கலெக்டர் மேனகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்