நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

முடிகண்டநல்லூரில் நாற்றங்கால் உற்பத்தி மையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்

Update: 2022-11-22 18:52 GMT

பொறையாறு:

ஜல்சக்தி அபியான் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழு செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சியில் உள்ள வட்டார நாற்றங்கால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தது. இதில் மத்திய ஆய்வு குழு பொறுப்பு அலுவலரும், மத்திய ஜவுளித்துறை துணை செயலாளருமான சுக்லா, தொழில்நுட்ப விஞ்ஞானி ஸ்ரீசவுஸ்ரீ, பாபு, பாலாசாஹிப் மற்றும் குழுவினர் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் கலந்துரையாடினர். இதனையடுத்து மத்திய குழுவினர் அந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரங்கள், பூக்கள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகளின் நாற்றுகளை பார்வையிட்டனர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர், ஜனகர், தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்