விபத்தில் செல்போன் கடைக்காரர் சாவு
விபத்தில் செல்போன் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
ஓசூர் அண்ணாநகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 32). செல்போன் கடை நடத்தி வந்தார். இவர், பெங்களூரு -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நடராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.