பேரூராட்சி ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

பேரூராட்சி ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-02-10 20:08 GMT

காட்டுப்புத்தூர்:

திருவாரூர் மாவட்டம், அரிதிருநள்ளூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55). இவர் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நடந்து சென்றார். அப்போது சீலை பிள்ளையார்புத்தூரை சேர்ந்த சண்முகம் மகன் சசிகுமார்(28) என்பவர் இருசக்கர வாகனத்தில் ராஜேந்திரன் மீது மோதுவது போல் சென்றுள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் கேட்டபோது, அவரை சசிகுமார் தாக்கியதாக காட்டுப்புத்தூர் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்