கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது வழக்கு
மதுரையில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெரு, பி.எம்.தேவர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(வயது 40). இவர் ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்த முத்துமாரி (30) என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியிருந்தார். அதற்கு அவர் பல்வேறு தவணைகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனால் இன்னும் கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும் என்று கூறி முத்துமாரி அவரை மிரட்டியுள்ளார். இது குறித்து கிருஷ்ணவேணி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்த போது பிரபல ரவுடி அப்பளராஜாவின் மனைவி முத்துமாரி என்பது தெரியவந்தது. எனவே போலீசார் முத்துமாரி மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.