ரூ5 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பட்டா வழங்கியவர் மீது வழக்கு

ஜோலார்பேட்டை அருகே ரூ5 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பட்டா வழங்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-29 17:53 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு, ரெட்டியூர் பகுதியில் வசிப்பவர் தசரதன் விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த இசை நடன குழு நடத்தி வரும் கோகுல் என்கிற நாகராஜிடம் தனக்கு கடை வைக்க இடம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு நாகராஜ் சக்கர குப்பத்தில் ஆதிதிராவிடர் நல வாரியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. தாசில்தாரிடம் பேசி பட்டா வாங்கி தருகிறேன் என்று கூறி அதற்காக ரூ2½ லட்சம் பெற்றுக் கொண்டு பட்டா கொடுத்துள்ளார். மீண்டும் 6 மாதம் கழித்து அந்த இடத்திற்கு பக்கத்திலேயே மற்றொரு இடம் உள்ளது எனக் கூறி மீண்டும் ரூ.2½ லட்சம் பெற்றுக் கொண்டு பசுமை வீடு கட்டுவதற்கு ஆர்டர் வாங்கி தருவதாக கூறி, அவரது தாயார் பெயரில் இந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மூன்று சென்ட் நிலத்தின் பத்திரத்தை பெற்று சென்றுள்ளார்.

பின்னர் அவர் பட்டா கொடுத்த இடத்தில் கட்டிடம் கட்டலாமா என்று தாசில்தாரிடம் கேட்டபோது இது போலி பட்டா என கூறினார். எனவே ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு அரசு நிலத்தில் போலி பட்டா வழங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கோகுல் நாகராஜன் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்