ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது வழக்கு
ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வடகாடு அருகே கருக்காக்குறிச்சி தெற்கு தெரு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சித்ராதேவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்து வரும் கட்டிட கட்டுமானப்பணிகள் மற்றும் பெயிண்ட் அடிக்கும் வேலையை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரான ரெங்கசாமி என்பவர் சாதி பெயரை சொல்லி ஊராட்சி மன்ற தலைவரை திட்டியுள்ளார். இதுகுறித்து சித்ராதேவியின் கணவர் ரெங்கப்பன் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.