செல்போன் திருடியதாக டிரைவர் மீது வழக்கு

செல்போன் திருடியதாக டிரைவர் மீது வழக்கு

Update: 2022-12-28 18:45 GMT

கோட்டூர்

கோட்டூர் அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 26). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தண்டபாணி, நேபாளியான சர்வான்ராம் மற்றும் வடமாநில தொழிலாளர்களை வைத்து தளவாய்பாளையத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் தங்கி கட்டி வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் சர்வான்ராம் செல்போனை சார்ஜர் போட்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது செல்போனை காணவில்லை.

மேலும் அங்கு வந்த சரக்கு வாகன டிரைவர் விஜயகுமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விஜயகுமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்