கலெக்டர் காரை வழி மறித்த அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மீது வழக்கு
கலெக்டர் காரை வழி மறித்த அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் கடந்த 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கல்லூரி வளாகத்தில் அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பிரபலங்கள் புகைப்படங்களுடன் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் காரை வழிமறித்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில், தாந்தோன்றிமலை போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.