தாய், மகளை தாக்கிய தம்பதி மீது வழக்கு

தாய், மகளை தாக்கிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-11 19:29 GMT

கரூர் மாவட்டம், புகழூர் செம்படாபாளையம் அருகே கணபதி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி பாப்பாத்தி(வயது 50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது அண்ணன் செல்வம்(51) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாப்பாத்தியும், அவரது மகள் நந்தினியும்(29) நேற்று வீட்டில் இருந்தபோது முன்விரோதம் காரணமாக செல்வம், அவரது மனைவி தவமணி (45) ஆகிய இருவரும் அங்கு வந்து, தாய், மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாப்பாத்தி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்