பண்ருட்டி அருகே கணவன்- மனைவியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பண்ருட்டி அருகே கணவன்- மனைவியை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-06-25 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டியை அடுத்த புலவன்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு(வயது 50), விவசாயி. இவருக்கும் முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த சிவக்குமார்(50) என்பவரது குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் கோவிந்தராசு, தனது மனைவி ஜெயசுதாவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கோவிந்தராசு மற்றும் ஜெயசுதாவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவக்குமார், செந்தமிழ்செல்வி ஆகியோர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்