யானைமலை மீது ஏறி போராட்டம் நடத்திய 120 பேர் மீது வழக்கு

யானைமலை மீது ஏறி போராட்டம் நடத்திய 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-07-22 19:30 GMT

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானைமலை மீது ஏறி அப்பகுதி மக்கள் மற்றும் எவர் சில்வர் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள், யானை மலை மீது அமர்ந்து, மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த போராட்டத்தை ஒத்தக்கடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தனர். இதற்கிடையே, அனுமதியின்றி மலை மேல் ஏறி போராட்டம் நடத்தியதாக அப்பகுதி மக்கள், எவர் சில்வர் தொழிலாளர்கள் உள்ளிட்ட 120 பேர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்