வரதட்சணை கொடுமை புகாரில் ேபாலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

வரதட்சணை கொடுமை புகாரில் ேபாலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-10 17:01 GMT


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் சுல்தான். இவரது மகள் ரேஷ்மா (வயது 19). இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எனக்கும், கோவை போத்தனூரை சேர்ந்த ஷாருக்கான் (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனது கணவர் கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் எனது கணவர் மற்றும் அவரது தாய் ரஹமத் நிஷா, கணவரின் தங்கை சப்ரின் மற்றும் அவரது கணவர் உமர் ஆகியோர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தினர்.

இதன் காரணமாக நான் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றேன். தொடர்ந்து அவர்கள் வரதட்சணை கேட்டு, மனரீதியாக துன்புறுத்தியதால் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய எனது கணவர் மற்றும் அவரது வீட்டார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், ஷாருக்கான் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்