ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முத்தரையர் சங்கத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முத்தரையர் சங்கத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-26 18:22 GMT

லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவர் தனது பாட்டிக்கு சொந்தமான நிலத்தில் முத்தரையர் சிலை வைத்து திறப்பு விழா நடத்துவதாக அழைப்பிதழ் அச்சடித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை மற்றும் சிங்கம் சிலையை நேற்று முன்தினம் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று குளித்தலை சுங்ககேட் பகுதிக்கு முத்தரையர் வாழ்வாதார சங்கத்தினர் சிலர் வந்து முத்தரையர் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதையடுத்து அவர்களை குளித்தலை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக அந்த சங்கத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்