ஓசூர்:-
ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே திம்மசந்திரத்தில் எருதுவிடும் விழா நடந்தது.. இதில் திடீரென மாடு ஒன்று கூட்டத்தில் புகுந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுநாத் (வயது26) என்ற வாலிபரை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த, கெலவரப்பள்ளி பாலமுருகன், தட்டிகானப்பள்ளி ராமமூர்த்தி மற்றும் நந்திமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 3 பேர் மீது ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.