செல்போன் கோபுர பொருட்களை திருடியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

செல்போன் கோபுர பொருட்களை திருடியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-12 18:50 GMT

புதுக்கோட்டையில் ஒரு இடத்தில் தனியார் நிறுவன செல்போன் கோபுரத்தின் இரும்பு பொருட்கள், ஜெனரேட்டர் உள்பட ரூ.20 லட்சத்து 48 ஆயிரத்து 600 மதிப்பிலான பொருட்களும், மற்றொரு இடத்தில் ரூ.29 லட்சத்து 99 ஆயிரத்து 67 மதிப்பிலான பொருட்களும் திருட்டு போனதாகவும், இடத்தின் உரிமையாளர்கள் திருடியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ரகுபதி என்பவர் புதுக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில் இடத்தின் உரிமையாளர்கள் 2 பேர் மீது கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்