சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-12-25 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நகர தலைவா் கோபிகிருஷ்ணன் (வயது31) என்பவா் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், 'தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து கடினவயல் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவா் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்