மதுபோதையில் தந்தை உள்பட 3 பேரை கட்டையால் தாக்கியவர் மீது வழக்கு
மதுபோதையில் தந்தை உள்பட 3 பேரை கட்டையால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
செம்பட்டிவிடுதி அருகே உள்ள மூக்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 75). இவருக்கு அய்யப்பன், ரவி ஆகிய 2 மகன்களும், இந்திரா என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் மதுபோதையில் இருந்த ரவி வலிகாளியம்மன் கோவில் அருகே தனது தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ரெங்கசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து செம்பட்டி விடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.