வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்கு

வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-08 18:33 GMT

கரூர் ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 25). இவர் தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் அவர் இணையதளத்தில் வங்கி வேலை சம்பந்தமாக தேடி உள்ளார். அப்போது இணையதளம் ஒன்றில் காணப்பட்ட செல்போன் நம்பரை சரவணகுமார் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது அதில் பேசிய நபர் தன் பெயர் நாகராஜ் எனவும், முல்லை கன்சல்டன்சி என்ற பெயரில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறியுள்ளார். மேலும் சரவணகுமாருக்கு வங்கி ஒன்றில் வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறி ரூ.6 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் சில நாட்கள் கழித்து சரவணகுமாரை தொடர்பு கொண்ட நாகராஜ் இன்னும் இது போன்று உங்களது நண்பர்கள் யாரேனும் படித்துவிட்டு இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். பின்னர் மேலும் சரவணகுமாரிடம் இருந்து ரூ.59 ஆயிரத்து 500 தொகையை நாகராஜ் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு வங்கி சம்பந்தமான எந்த வேலையும் நாகராஜ் வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சரவணகுமார் இதுகுறித்து கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நாகராஜ் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்