தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2022-11-01 19:10 GMT

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா (வயது 48). இவர் கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக தான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் மீனா மீது சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்