டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-22 18:54 GMT

தோகைமலை அருகே உள்ள உப்புகாய்ச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் வெள்ளைச்சாமிக்கு, தொட்டியம் வலையக்காரத்தெருவை சேர்ந்த தமிழ்நாடு முத்திரை சங்க நிறுவனர் சூரியபாலு என்பவர் ஆதரவாக செயல்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக வெள்ளைச்சாமி, சூரியபாலு ஆகியோர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வெள்ளைச்சாமி மற்றும் சூரியபாலு மீது வழக்குப்பதிவு செய்ததற்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவர் தான் காரணம் என கூறி சூரியபாலு, குமாரை செல்போன் மூலம் தகாதவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சூரியபாலு மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்