இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு
காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போத்தனூர்
கோவை கிணத்துக்கடவு வடசித்தூரை சேர்ந்தவர் கிருஸ்ணமூர்த்தி. இவருடைய மகன் வருண்பிரகாஷ் (வயது25). இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுக ளாக பொள்ளாச்சி பகுதியில் செவிலியராக பணியாற்றி வரும் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். மேலும் அவர், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வருண்பிரகாஷிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும் அவருடைய பெற்றோரும் இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வருண்பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது 2 பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.