தேசிய கொடியில் மாற்றம் செய்து முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்கு
தேசிய கொடியில் மாற்றம் செய்து முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள், முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் எம்.எச்.எம். அப்துல்லா என்பவர் பதிவிட்ட முகநூல் பதிவில் தேசியகொடியில் அசோகசக்கரத்தை எடுத்துவிட்டு, பிறை நட்சத்திரம் வைக்கப்பட்டு 2047 என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் அளித்த புகாரின்பேரில், அப்துல்லா என்பவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.