ஊராட்சி தலைவரை தாக்கியவர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர் மீது வழக்கு

Update: 2022-11-13 20:22 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடையை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 57). இவர் நட்டாலம் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று நட்டாலம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளியாடி கொடுக்கவிளை பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அதை ராஜகுமார் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் சாலையோரத்தில் கிடந்த பொருட்களை சுத்தப்படுத்தி புல் போன்றவைகளை ஓரமாக வைத்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ராஜகுமார் (54) என்பவர் அங்கு சென்று தனது வீட்டு முன்பக்கத்தில் பணியாளர்கள் வைத்திருந்த புற்களை எடுத்து அருகில் இரந்த நீரோடையில் வீசினார். இதை ஊராட்சி தலைவர் ராஜகுமார் தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் ராஜகுமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அருகில் கிடந்த கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜகுமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜகுமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்