மளிகைக்கடைக்காரரை தாக்கியவர் மீது வழக்கு
மளிகைக்கடைக்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விராலிமலை ஒன்றியம், நீர்பழனி ஊராட்சிக்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிஅய்யா (வயது 45). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அதேஊரை சேர்ந்த சக்திவேல் என்பவர் சாமிஅய்யாவின் கடைக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறு செய்ததுடன் சாமி அய்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து மளிகைக்கடைக்காரரை தாக்கிய சக்திவேலை வலைவீசி தேடி வருகிறார்.