வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்த விவசாயி மீது வழக்கு

கண்டமனூர் அருகே வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்த விவசாயி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-29 21:00 GMT

சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வனவிலங்குகளை வேட்டையாடியதாக 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கண்டமனூர் அருகே மண்ணூத்து கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (வயது 40) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்தநிலையில் சவுந்தரபாண்டியன் மண்ணூத்து கிராமத்தில் பதுங்கி இருப்பதாக சின்னமனூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் மண்ணூத்து கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு வீட்டில் பதுங்கி இருந்த சவுந்தரபாண்டியனை வனத்துறையினர் கைது செய்து, விசாரணைக்காக சின்னமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு தங்களது காரில் அழைத்து சென்றனர்.

கண்டமனூர் அருகே அண்ணாநகர்-துரைச்சாமிபுரம் இடையே வனத்துறை கார் வந்தபோது, மண்ணூத்து கிராமத்தை சேர்ந்த விவசாயியான குபேந்திரன் (48) என்பவர் மறித்தார். பின்னர் சவுந்தரபாண்டியனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குபேந்திரன் வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் அங்கிருந்து அவர் சென்றுவிட்டார். இதுகுறித்து வனவர் ஜெயக்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு பணிக்கு இடையூறு செய்ததாக குபேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்