பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
மூங்கில்துறைப்பட்டு அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மனைவி லூர்துசசிகலா(வயது 35). இவருக்கும், இமானுவேல்ராஜ் மனைவி மரியமதலேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மரியமதலேயம்மாள், இம்மானுவேல்ராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து லூர்துசசிகலாவை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இமானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகியோர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.