சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
சிதம்பரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சிதம்பரம்
சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் (வயது 29). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து கடந்த 20.2.2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமியை அவர் பாலியல் பாலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து புவனகிரி சமூக நல ஒன்றிய விரிவாக்க அலுவலர் புஷ்பவள்ளி கொடுத்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.