பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-07-22 16:57 GMT

மயிலாடுதுறையை அடுத்த திருவேள்விக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த கலியமூர்த்தி மகன் குட்டி என்கிற ராஜேஷ். இவர், 22 வயது இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ராஜேசிடம் கேட்டதோடு, இதுகுறித்து அவரது தாய் லதாவிடம் தெரிவித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு, திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த லதா, அப்பெண்ணை மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், லதாவின் சகோதரியும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் ராஜேஷ், அவரது தாய் லதா, லதாவின் சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் லதா கைது செய்யப்பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்