துப்புரவு பணியாளரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்கு
துப்புரவு பணியாளரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அர்ஜன தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 42). இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசாமி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் (23) என்பவர் சிவசாமியிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்த புகாரின்பேரின் வேலாயுதம்பாளையம் போலீசார் கதிரேசன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.