புதிய திரைப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு

புதிய திரைப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-07 18:31 GMT

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் என்ற திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த போது, கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி இரவு பெரம்பலூரில் கேபிள் டி.வி.யில் ஒரு உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது. புதிய திரைப்படத்தை திருட்டு தனமாக உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர் சதீஸ்குமார் என்பவர் கடலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந்தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த உள்ளூர் தனியார் தொலைக்காட்சி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்