மத்திய சிறையில் தகராறில் ஈடுபட்ட கைதி மீது வழக்கு

மத்திய சிறையில் தகராறில் ஈடுபட்ட கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-02 21:19 GMT

திருச்சி சர்க்கார்பாளையம் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 27). இவர் மீதுள்ள கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் சிறைக்குள் கைதிகளிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் சென்னை பூந்தமல்லி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் ஆஜராக அழைத்து வரப்பட்ட ஜெகதீசன், மறுநாளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் ஒருநாள் அடைத்து வைக்க போலீசார் ஜெகதீசனை அழைத்து வந்தனர். அப்போது சிறை கைதிகளுக்கு வழக்கம்போல் மேற்கொள்ளும் சோதனைகளுக்கு ஜெகதீசன் மறுப்பு தெரிவித்து, சிறை அலுவலர்களிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அலுவலர் சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அரசுப்பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெகதீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்