கோர்ட்டு வளாகத்தில் சாட்சியை மிரட்டியவர் மீது வழக்கு
கோர்ட்டு வளாகத்தில் சாட்சியை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் தீனதயாளன். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவரை விசாரணைக்காக போலீசார் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடிந்து திரும்ப அழைத்து சென்றனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் சாட்சியம் அளிக்க நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்து தீனதயாளன் தனக்கு எதிராக எப்படி சாட்சியம் அளிக்கலாம் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இது குறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தீனதயாளன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.