மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டவர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-12-17 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வெங்கடேஷ் (வயது 28). இவருக்கும் ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சரண்யா (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேவிபட்டினத்தில் திருமணம் நடந்தது. அப்போது சரண்யாவுக்கு 15 பவுன் நகையும், வெங்கடேசுக்கு 5 பவுன் நகையும் மற்றும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்தார்களாம். திருமணம் நடந்த 2 மாதத்தில் வெங்கடேஷ் சரண்யாவிடம் மேலும் 30 பவுன் நகைகள் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும் என்றும் அப்போதுதான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி அடித்து கொடுமைபடுத்தினாராம். இதற்கு அவரின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து சரண்யா ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வெங்கடேஷ் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்