தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-04-12 19:06 GMT

ஈரோடு காட்டூர்குளத்துபாளையத்தை சேர்ந்தவர் சேதுபதி (வயது 29). இவர் தனியார் செல்போன் நிறுவன கேபிள் பொருத்தும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பகல் சங்கிலியாண்டபுரம் பகுதியில் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது, அந்த வழியாக 4 பேர் வந்தனர். அவர்கள் சேதுபதியிடம் கேபிள் பொருத்தும் பணியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அப்போது அரிவாள், உருட்டுக்கட்டையால் அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.4,200-ஐ பறித்து கொண்டு சென்றனர். இதில் காயம் அடைந்த சேதுபதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ரவுடிகளான இளையராஜா (38), ஏழுமலை (27) உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையை சேர்ந்தவர் முத்து (49). இவர் அழகிரிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டனர். இதுகுறித்து முத்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருவானைக்காவலை சேர்ந்த வரதராஜ் (23), திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த முகேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்