பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் மீது வழக்கு
பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி உய்யகொண்டான்திருமலை சண்முகா நகர் பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ராஜா, முஸ்தபா ஆகியோர் ஒரு இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த இளம் பெண்ணை மீட்டு காஜாமலையில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் ராஜா, முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.