விவசாய சங்க பெண் தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

விவசாய சங்க பெண் தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-10-02 21:56 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெண்கள் பிரிவு தலைவர் கவுசல்யா ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் அங்கு இருதரப்பு விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மேகராஜை (வயது 50) சாதி பெயரை சொல்லி திட்டியதாக செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கவுசல்யா, கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்