சரக்கு வேனுக்கு தீ வைப்பு; வாலிபர் கைது

தொழில் போட்டியில் சரக்கு வேனுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-27 17:04 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கொழுமகொண்டான் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 28). சொந்தமாக இவர், சரக்கு வேனை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் அருகே சரக்கு வேனை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.

இந்தநிலையில் நள்ளிரவில் சரக்குவேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார். இருப்பினும் சரக்கு வேனின் முன்பகுதி எரிந்து சாம்பல் ஆனது.

இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் கேசவன் புகார் அளித்தார். அந்த புகாரில், பழனி அருகே உள்ள சங்கன் செட்டிவலசு கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து (28) என்பவரும், சரக்கு வேனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அவருக்கும், எனக்கும் தொழில்போட்டி இருந்து வந்தது. இதன்காரணாக அவர், சரக்கு வேனுக்கு தீ வைத்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் செல்லமுத்துவை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தொழில் போட்டி காரணமாக கேசவனின் சரக்கு வேனுக்கு செல்லமுத்து தீ வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்