பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு வேன்

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது.

Update: 2023-08-28 19:45 GMT

மதுரையில் இருந்து சினிமா தியேட்டருக்கு தேவையான கருவிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று காலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை மதுரை மாவட்டம் சோலை அழகுபுரத்தை சேர்ந்த முத்துமணி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நால்ரோடு அருகே சரக்கு வேன் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பின்னர் அங்கிருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Tags:    

மேலும் செய்திகள்