கடம்பூர் அருகே சரக்கு லாரி பள்ளத்தில் இறங்கியது- டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்
கடம்பூர் அருகே சரக்கு லாரி பள்ளத்தில் இறங்கியது- டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே குன்றி வாழைமரத்தூரில் உள்ள சோளக்காட்டில் இருந்து சரக்கு லாரி மக்காச்சோளத்தை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. குன்றியை சேர்ந்த சார்ஜ் (வயது43) என்பவர் சரக்கு லாரியை ஓட்டி வந்தார்.
குன்றி-கடம்பூர் ரோட்டில் நாமக்கல் மேடு என்ற இடத்தில் சென்றபோது லாரி திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் வாகனத்தில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு மக்காச்சோளம் அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.