சென்னை: அண்ணாசாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

சென்னை, அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2022-07-25 16:15 GMT

சென்னை:

சென்னை தேனாம்பேட்டை அன்பகம் அருகே, இன்று மதியம் அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து காரில் உள்ளே இருந்த நபர் காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு விரைந்து வெளியேறினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வாகனஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தேனாம்பேட்டை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இது குறித்து நடந்த விசாரணையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த சுரேந்தர் சிங் என்பவர், இன்று தனது வீட்டில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்ததும். அப்போது, திடீரென காரின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததும் தெரிய வந்தது. இந்த தீவிபத்தில் காரின் என்ஜின் முழுவதுமாக எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்