சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு
ஆத்தூரில் சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் செல்லும் வழியில் பவர் ஹவுஸ் அருகே வசிப்பவர் பழனிவேல் (வயது 40). இவர், நேற்று காலை 8 மணிக்கு தனது நண்பருக்கு சொந்தமான ஒரு காரை எடுத்துக் கொண்டு ஆத்தூர் டவுன் நோக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென கார் பழனிவேல் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது மோதி அங்குள்ள ஒரு ஷாப்பிங் மகாலில் மோதி கார் நின்றது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு காரை ஓட்டி வந்த பழனிவேலை பிடித்து ஆத்தூரில் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பழனிவேலிடம் விசாரணை நடத்தி மதுபோதையில் கார் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.