சேற்றில் சிக்கிய கார்

காட்பாடியில் கார் சேற்றில் சிக்கியது.

Update: 2022-12-12 18:32 GMT

வேலூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. சாலைகள் சேரும் சகதியுமாக மாறியது. காட்பாடி விருதம்பட்டு சக்திநகர் இரண்டாவது தெருவில் நேற்று பகலில் ஒரு கார் சென்றது. சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்ததால், கார் சேற்றில் சிக்கிக் கொண்டது. காரை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் உரிமையாளர் அவதிப்பட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வந்து மிகுந்து காரை மீட்டனர்.

இந்த சாலையில் இருசக்கர வாகனம் மட்டுமல்ல நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைத்து தார் சாலையாக அமைத்து தர வேண்டும் எனவும், அருப்புமேடு சாலை உள்பட பல்வேறு சாலைகள் தொடர் மழையின் காரணமாக சேதம் அடைந்துள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்